இந்தியாவில் உள்ள 35 ஆயிரம் கோவில்கள் மசூதியாக மாற்றப்பட்டுள்ளதாம் - வேதாந்தம்!

காவி தீவிரவாதிகளால் இடிக்க பட்ட பாபரி மஸ்ஜித்
முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜிதை இடித்தபோது, அடுத்து எங்களின் குறி காசி, மதுரா ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள்தான். மேலும் மூவாயிரம் மசூதிகள் கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டுள்ளன. எனவே அவைகளையும் மீட்போம் என்று இந்துத்துவாக்கள் கொக்கரித்ததை அனைவரும் அறிவர்.

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜித் இடத்தை ஆதாரங்களை  புறந்தள்ளி, இந்துத்துவாக்களின் 'நம்பிக்கை' அடிப்படையில் இரு பங்கு இடத்தை கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள்  வழங்கிய உடனேயே, ''இது தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கும்'' என்று நடுநிலையாளர்கள் கருத்துக்கூறி இருந்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், லட்டு போல இருபங்கு இடம் கிடைத்த தைரியத்தில், இந்துத்துவாக்களின் மசூதிகள்  மீதான குறி அதிகமாகியுள்ளது. அதாவது மூவாயிரம் மசூதிகள் என்ற எண்ணிக்கை  சுமார் 35 ஆயிரம் ஆகிவிட்டது.

ராமேசுவரத்தில் விசுவ இந்து பரிஷத் அகில உலக செயல்தலைவர் வேதாந்தம்ஜி கூறியதாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியில்,
ராமஜென்ம பூமி குறித்து கோர்ட்டு தீர்ப்பு சரித்திரத்தில் மிக முக்கியமானது. இந்த தீர்ப்புக்கு பிறகு மத்திய மாநில அரசுகள் பிரச்சினை ஏற்படும் என்று கருதியதால் அதிகளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்திய மக்கள் மிக பண்பாடுடன் நடந்து கொண்டனர். 3 நீதிபதிகளின் கருத்தில் வேறுபாடு இல்லை. ராமர் பிறந்த இடம் எது என்பதை தெளிவாக கூறி உள்ளனர். இந்த விஷயத்தில் மேல்முறையீடு என்பது தேவையில்லாதது. இந்தியாவில் சுமார் 35 ஆயிரம் கோவில்கள் மசூதியாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மதுரா, காசி, அயோத்தி மட்டும் தான் பிரச்சினைக்குரியதாக உள்ளது. எனவே முஸ்லிம் மக்கள் பெருந்தன்மையோடு இந்த 3 இடங்களிலும் கோவில்கள் கட்டுவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தரவேண்டும். எந்த மதமாக இருந்தாலும் நம்பிக்கைதான் முக்கியம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது முப்பத்தி ஐந்தாயிரம் பள்ளிவாசல்கள் கோயிலை இடித்துவிட்டு கட்டப் பட்டுள்ளதாம். பேனை பெருமாளாக்குவது என்று சொல்வார்கள். பாபர்  மஸ்ஜித் இடத்தில் ஆரம்பித்த இவர்களின் ஆக்கிரமிப்பு பட்டியல், மூன்றாகி- மூவாயிரமாகி, முப்பந்தைந்து ஆயிரத்தில் நிற்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மசூதிகளும் கோயிகளின் மேல்தான் எழுப்பப் பட்டது என்று இந்த வேதாந்தம் வகையறாக்கள் 'வேதாந்தம்' பேசுவதற்கு முன், முஸ்லிம்கள் தமக்குள் இருக்கும் இயக்கப் பஞ்சாயத்துக்களை இரண்டாம்பட்சமாக்கி, இறை இல்ல மீட்பு விஷயத்திலாவது ஒன்றிணைய வேண்டும். ஏனெனில் இந்துத்துவாக்களின் 'நம்பிக்கை' அடிப்படையில் தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் தயாராக உள்ளதை பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பு படம்பிடித்து காட்டிவிட்டது.

இதற்கு பின்னும் எங்களின் 'தனித்துவம்' தான் முக்கியம் என்று இயக்கங்கள் முறுக்கிக் கொண்டு சென்றால், முற்றிலும் இழக்கும் நிலை உருவாகும் என்பதை இயக்கங்கள் உணரவேண்டும். 
 
ஒன்றிணைவோம்! சக்தி பெறுவோம்!! இன்ஷா அல்லாஹ் 

Related

VHP 7223121927122472446

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item