'நான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறது அயோத்தியா தீர்ப்பு' - எல்.கே.அத்வானி

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துவதாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பின்னணியில் தற்காலிக கோயில் அமைந்துள்ள இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தான் நடத்தப்போவதாக அத்வானி தெரிவிக்கிறார்.

1989 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயிலை கட்டவேண்டுமெனக் கோரி அத்வானி ரதயாத்திரையை நடத்தினார்.

அத்வானியின் ரத யாத்திரை நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி ரத்தயாத்திரையாக மாறியது.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பு சட்டங்களைவிட நம்பிக்கையை உயர்த்திப்பிடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார் அத்வானி. தீர்ப்பின் மூலம் சட்டம் நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பதாக அத்வானி கூறினார்.

ஃபைஸாபாத்தில் சரயூ நதியின் கரையில் காம்ப்ளக்ஸிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டலாம் என பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்காரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருந்தார். இதனை அத்வானியும் ஆதரித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்
Koothanallur Muslims

Related

RSS 8751788068502798710

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item