கோவையில் RSS அணிவகுப்புக்கு தடை: போலீஸ் எச்சரிக்கை


ஆர்.எஸ்.எஸ்., என்ற  தீவிரவாத அமைப்பு துவக்கப்பட்ட நாளான விஜயதசமி நாளில் (வரும் 17ம் தேதி), கோவை நகரில் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறிய போலீசார், அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், தடையை மீறி அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஆயத்த அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் செல்வபுரம், பனைமரத்தூர் பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கு சீருடையுடன் அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக சொக்கம்புதூரைச் சேர்ந்த மோகன்ராஜ்(33), சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செல்வம்(38), கிருஷ்ணமூர்த்தி(35) ஆகியோரை கைது செய்தனர். அணிவகுப்பு பயிற்சிக் குழுவுக்கு தலைமை வகித்ததாக சபரி, ஜோதிராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் சீருடை அணிவகுப்பு நடத்தினால், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனுமதி மறுத்துள்ளோம். இது குறித்த நிராகரிப்பு நோட்டீஸ், அந்த அமைப்பினருக்கு முறைப்படி தரப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும், தடையை மீறி அணிவகுப்பு நடத்தும் முயற்சியாக சீருடையுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்தே, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நாளில் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே வேளையில், சாலையில் அல்லாமல், ஏதாவது ஒரு வளாகத்துக்குள் அணிவகுப்பு நடத்திக்கொள்ள அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும். இவ்வாறு போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளதை, அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளர் ஸ்ரீராமன் கூறுகையில், "சாலையில் 500 தொண்டர்களுடன் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டோம்; போலீசார் மறுத்துள்ளனர். சட்டப்படி அனுமதி பெற, சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளோம். கோவை நகரில் இதற்கு முன், தி.மு.க., - டி.ஒய்.எப்.ஐ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினரின் பேரணிகள் முக்கிய சாலைகளில் நடந்துள்ளன. இதனால், எங்களுக்கும் அனுமதி தர வேண்டுமென கோர்ட்டில் முறையிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்; பல்வேறு இடங்களுக்கும் சென்று, பயிற்சியில் ஈடுபடக்கூடாது என தொண்டர்களை மிரட்டி வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம்" என்றார்.

Related

எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்

RSS-ன் தலைவர்களுள் ஒருவரும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்டவருமான இந்திரேஷ் குமாரின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரெஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தான் அண...

அன்னா ஹசாரேவையை இயக்குவதே நாங்கள் தான் : RSS

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்ப...

தென்காசியில் குண்டு வெடிப்பு - ஹிந்து தீவிரவாதிகளுக்கு தொடர்ப்பா?

தென்காசி அருகில் உள்ள பண்பொழி யில் பள்ளி சிறுவன் டெடனேட்டர் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்தான் . இது தொடர்பான போலீஸ் விசாரணையில் அதே பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்த ராஜேந்த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item