மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்-காங்

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக, பஜ்ரங் தள் போன்ற ஹிந்து தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டது.

இதையடுத்து அத்வானி உள்பட பல்வேறு அயோக்கிய தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சு குப்தாவின் சாட்சியம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானியுடன் இருந்த அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் அளித்துள்ள சாட்சியத்தில், அத்வானி மற்றும் மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மசூதியை இடிக்க தூண்டிவிடும் வகையில் பேசியதாக கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் குலாப் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பதவி காலியாக உள்ளது.

இந்த பணியிடத்தை நிரப்புமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி கடிதம் எழுதியும் இதுவரை புதிய மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த மசூதி இடிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துளளது.

இதற்கிடையே, அயோத்தி நில விவகார தீர்ப்பையும் பாபர் மசூதி இடிப்பு வழக்கையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அயோத்தி நில விவகாரம் என்பது சிவில் வழக்கு, பாபர் மசூதி இடிப்பு என்பது கிரிமினல் வழக்கு. இந்த இரண்டையும் சேர்த்துப் பேசி மக்களைக் குழப்ப காங்கிரஸ் முயல்கிறது என்றார்.

Koothanallur Muslims

Related

RSS 3417653923817931939

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item