சன்னி வக்ஃபோர்டு தலைவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2010/10/blog-post_6785.html
Popular Front of India State Leaders |
அப்பீல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகின்றன
பாப்ரி மஸ்ஜித் நிலத்தை திரும்ப அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வருவதாக உ.பி மாநில சன்னி வக்ஃபோர்டு தலைவர் சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார் அவர்.
வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பார்கள்
இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.
சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன்- அன்சாரி
முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI, இமாம் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.
பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.
செய்தி:தேஜஸ்
கூத்தாநல்லூர் முஸ்லீம்கள்