இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது : அஹ்மது நிஜாத் ஆவேசம்

IRAN President & Hisbullah President
இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் இஸ்ரேலியர்கள் தாங்கள் பூர்விக நாட்டிற்கே திரும்ப போகும் நேரம் வந்து விட்டது என்றும் இஸ்ரேலிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள பின்ட் ஜிபில் எனுமிடத்தில் நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் பேரணியில் இஸ்ரேலின் கடும் எதிரியான ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறினார்.

2006-ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஏராளமான மக்கள் பின்ட் ஜிபிலில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மறைவை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அஹ்மது நிஜாத் மக்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே "பின்ட் ஜிபில் உயிரோடு உள்ளது. மலை போன்ற உறுதியுள்ள உங்களின் வீரத்தை பாராட்டுகிறேன். என்றும் உங்களுக்கு ஈரான் துணை நிற்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு மிக அருகில் நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் அஹ்மது நிஜாத் கலந்து கொண்டது இஸ்ரேலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. 
 
அஹ்மது நிஜாத்தின் அதிகாரபூர்வ லெபனான் வருகையை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் கண்டித்ததுடன் இப்பயணத்தின் மூலம் லெபனானும் தீமைகளின் அச்சு நாடுகளில் இணைந்து விட்டதாக கூறினர்.

பின்னர் லெபனான் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அஹ்மது நிஜாத் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வித அறிவியல் வளர்ச்சியும் பெற்று விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக கூறிய அவர் தாம் விஞ்ஞானத்தை பரப்ப நினைப்பதாகவும் அமெரிக்காவோ அதை தடுத்து இருட்டில் ஆழ்த்த நினைப்பதாகவும் கூறினார். 
 
KOOTHANALLUR MUSLIMS

Related

lebanon 7743642383756448948

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item