ஆதாரங்கள் அடிபடையில் கொடுக்க பட்ட தீர்ப்பு அல்ல - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

அலகாபாத் உயர் நீதி மன்றம் பாபரி மஸ்ஜித் நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் வழக்கின் முக்கிய பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் தீர்ப்பின் மைய கருத்து சர்ச்சைக்குரிய நிலத்தின் இரண்டு பகுதிகளை ஹிந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பிரித்து அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் மைய பகுதியை ஹிந்துகளுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வழக்கில் சமர்பிக்கப்பட்ட உண்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் வெறுமனே மத நம்பிக்கையின் அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது நமக்கு வேதனையளிக்கிறது. எந்த கட்சியினரும் நிலத்தை பிரித்து வழங்கும்படி கோரவில்லை. இவ்வழக்கில் அகழ்வாரய்ச்சியின் கண்டுபிடிப்பிற்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு நடைமுறையை வரும் காலங்களில் வரும் வழக்குகளிலும் பின்பற்றப்படுமானால் நாட்டின் பல மத மற்றும் பண்டைய கால கட்டடங்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.

வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் உயர்நீதி மன்ற தீர்ப்பு தான் இறுதியானது என்று குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு உள்ளது. உ.பி. சுன்னத் வக்பு போர்டு உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்திய முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை சட்டரீதியாகவும் ஜனநாயாக முறையிலும் மீட்டு எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இந்நிலையில் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பொது அமைதியினையும் மத நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

Related

SDPI 3210700200472351783

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item