கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார்.இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி: தேஜஸ் -

Related

RSS 8657670622802392264

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item