எதிரியின் நோக்கம் ஈரானும், இஸ்லாமும் - காம்னஈ

ஈரானுடன் இஸ்லாமும் எதிரியின் லட்சியம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் காம்னஈ தெரிவித்துள்ளார். கும் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் உரை நிகழ்த்துகையில் காம்னஈ இதனை தெரிவித்தார்.

ஈரானின் புரட்சியை சீர்குலைக்க நாடுபவர்கள் குறிவைப்பது இரண்டாகும். ஒன்று ஈரான் மக்களின் மதமும் இரண்டாவதாக புரட்சியுடனான ஈரான் மக்களின் சமர்ப்பணமுமாகும்.

மத அடிப்படையில் அல்லாத புரட்சியால் எதிரிகளின் சதித் திட்டங்களை எதிர்த்து நிற்கமுடியாது என்பதை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மதத்தின் அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் நிர்பந்தங்களுக்கு அதிகாரத்தின் அகங்காரத்திற்கு அடிபணியாது என அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

ஈரான் மக்கள் புரட்சியை எப்பொழுதும் ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாத் துறையிலும் ஈரான் மக்களின் பரிபூரண ஆதரவும், அரசும் மக்களுக்குமிடையே ஐக்கியமும் தொடர்ந்து நீடிக்காவிட்டால் எதிரிகளின் சதித்திட்டங்களை எதிர்த்து முறியடிக்க முடியாது என்றும் காம்னஈ ஈரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

செய்தி:தேஜஸ் -

Related

muslim country 7046543508004219664

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item