பர்தாவை தடை செய்ய வேண்டும்!- சிவசேனா கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் பர்தாவைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று புறநகர் சாந்தாகுரூஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து பர்தா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும் என சிவசேனை பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்தாவையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரெஞ்சு அரசு தடை செய்துள்ளதை சாம்னா பத்திரிகை பாராட்டியுள்ளது. பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கியிலும் கமால் பாஷா, பர்தாவுக்கு தடை விதித்தார். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை என்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
பாலைவனதூது 

Related

Siva sena 1295549368036750635

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item