நீதிபதி எஸ்.யு.கான் தீர்ப்பின் சாரம்சம்

கோயிலை இடித்து பாப்ரி மஸ்ஜித் கட்டப்படவில்லை என்பதை பாப்ரி மஸ்ஜிதின் நில உரிமைத் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறிய அலகாபாத உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சில் மூன்று நீதிபதிகளில் ஒருவரான ஸிப்கத்துல்லாஹ் கான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அவருடைய தீர்ப்பின் முக்கிய பகுதிகள்:

1.சர்சைக்குரிய கட்டிடம் பாபரின் உத்தரவின் பெயரால் கட்டப்பட்ட மஸ்ஜிதாகும்.

2.சர்ச்சைக்குரிய பகுதி பாபருக்கோ அல்லது அவருடையை கட்டளைப்படி மஸ்ஜிதை நிர்மாணித்தவருக்கோ உரிமையுடையது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.

3.எந்தவொரு கோயிலையும் இடித்து மஸ்ஜித் கட்டப்படவில்லை.

4.மஸ்ஜித் கட்டப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே கோவில்கள் அழிந்துவிட்டிருந்தன. ஆதலால், கோயில் சிதிலங்களில் சிலவற்றை மஸ்ஜிதை கட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.

5.சர்ச்சைக்குரிய பரந்த நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் ராமன் பிறந்த இடம் இருப்பதாக நீண்டகாலமாகவே இந்துக்கள் கருதி வருகின்றனர். எனினும், பிரச்சனைக்குரிய பரந்த நிலத்திற்குள் ராமர் பிறந்த இடமாக, எந்தவொரு குறிப்பிட்ட சிறிய இடமும் சுட்டிக்காட்டப்படவில்லை.

6.பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதற்கு பிறகே இவ்விடத்தில் ராமன் பிறந்தான் என்ற வாதம் எழுந்தது.

7.1855 ஆம் ஆண்டிற்கு முன்பே ராம் சாபுத்ரா மற்றும் சீதாவின் அடுக்களையையும் இந்துக்கள் வழிபடத் துவங்கியுள்ளனர்.

8.அதனால்தான் சர்ச்சைக்குரிய நிலம் இரு பிரிவினருக்கும் உரிமையுடையது.

9.வசதிக்காக இரு பிரிவினரும் சர்ச்சைக்குரிய இடத்தில் வேறுபட்ட பகுதிகளை பயன்படுத்தியிருந்தாலும் அது குறிப்பாக பிரிக்கப்படவில்லை.

10.நிலத்தின் உரிமை வாதம் எப்பொழுது துவங்கியது என்பதை துல்லியமாக நிரூபிக்க இரு தரப்பினருக்கும் இயலவில்லை.

11.1949 ற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ராமன் மஸ்ஜிதின் கையக்கோபுரத்திற்கு நேர்கீழே உள்ள இடத்தில்தான் பிறந்தான் என்று இந்துக்கள் நம்பிக்கைக்கொள்ள ஆரம்பித்தனர்.

12.1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அதிகாலையில் மஸ்ஜிதின் மத்திய கோபுரத்திற்கு கீழே ராமனின் சிலை வைக்கப்பட்டது.

13.மேற்கூறப்பட்ட சாரம்சத்தின் அடிப்படையில் நோக்கும்போது, பிரச்சனைக்குரிய மொத்த வளாகத்தையும் இந்துக்கள், முஸ்லிம்கள் என இருபிரிவினரும் கூட்டாக அனுபவிக்க பாத்யதை உள்ளது. இறுதிகட்ட பாகப்பிரிவினை நடவடிக்கையின்போது, ராமர் சிலை அமைந்துள்ள பகுதியான மஸ்ஜிதின் மைய கோபுரத்தின் கீழே உள்ள நிலத்தை இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு : அகமதுனிஜாத் எச்சரிக்கை

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், தாக்குதல் நடத்துபவர்களின் கையை ஈரான் இராணுவத்தினர் வெட்டி விடுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் முகமத் அகமதுனிஜாத் எச்சரித்துள்ளார்.ஈராக் - ஈரான் போர் தொடங்கி...

சங்பரிவாரின் புதிய முகம் நடிகன் கமல்? உன்னைப்போல் ஒருவன்! விமர்சனம்

திரை வகை :முஸ்லிம்கள் மட்டுமே திவிரவாதிகள்!(காதல்,பொழுதுபோக்கு,கலை அல்ல)சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப...

முன்ததர் விடுதலையானார்:ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தின் ஆவேச உணர்வோடு

சிறையிலிருந்து விடுதலையான முன்ததர் அல் ஸைதியை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவரது சகோதரிபாக்தாத்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item