ஜீன் 1 முதல் ஜீன் 7 வரை ஆபாச எதிர்ப்பு பிரசாரம் -PFI

ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடமுள்ள ஒழுக்க மாண்புகளே. ஆனால் இன்று உலகளவில் கலாச்சாரம் என்ற பெயரில் இத்தகைய ஒழுக்க மாண்புகள் உடைத்தெரியப்பட்டு வருகிறது. அறைகுறை உடைகளும், ஒழுக்க கட்டுபாடின்மைகளும், இதனை அங்கிகரிக்கும் சமூகம் மற்றும் அரசு, என்று சமூகம் சீரழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

ஆபாசத்தை முன்நிறுத்தி சர்வசாதரணமாக இன்று பல ஆடைகள் தயாரிப்புகள், விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் எனப் பலர் தங்கள் வயிற்று பிழைப்பை நடத்தி வருகின்றார்கள். அரசோ இத்தகைய ஆபாசத்திற்கு எதிராக மக்களை உருவாக்குவதை விட்டு விட்டு ஆபாசத்தினால் எழும் தீமைகளை எவ்வாறு தடுப்பது என்பதிலே கவனம் செலுத்துகிறது. மக்களும், ஒரு மனிதனை ஒழுக்கத்தை கொண்டு மதிப்பிடாமல் வெறுமனே பணத்தை கொண்டு மதிப்பீடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகளின் விளைவால் மென்மேலும் இத்தகைய ஆபாசங்கள் வளர்ந்து பல தீமைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஈவ் டிசிங், சிறுமிகள் உட்பட பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல், விபச்சாரம், கற்பழிப்பு, கள்ளத் தொடர்பு மற்றும் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள், இதனால் கணவன் அல்லது மனைவி கொலை செய்யப்படுதல், விரக்தி மற்றும் தற்கொலை, விவாகரத்து போன்ற பலவேறு சமூக தீமைகள் அன்றாடம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இருந்து சமூகம் மீளவேண்டுமெனில் ஆபாசத்தின் ஊற்றாகிய பார்வையில் இருந்து தொடங்கி எண்ணம், சிந்தனை, பேச்சு, செயல்பாடு போன்ற அனைத்திலிருந்தும் மீள வேண்டும்.
ஆபாச பார்வைகளே தீய எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இத்தீய எண்ணம் மன குமுறலை ஏற்படுத்துகிறது. இந்த குமுறல் தீய செயல்களுக்கு வடிவம் கொடுக்கிறது. எனவே ஆபாசத்ததை ஒழிக்க பார்வைகளிலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து ஆபாசத்தின் பல தீய முகங்களை விட்டு விலக வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறை திருக்குரானில் பின் வருமாறு கூறுகிறான் -

(நபியே) முஃமின்கனான(நம்பிக்கையாளர்கள்) ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக - அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். - (குர்ஆன் 42.30)

இத்தகைய ஆபாசத்தினால் குடும்ப அமைப்பு சீரழிக்கப்படுகின்றது. கணவன்-மனைவியிடையே உள்ள பிணைப்பை பலகீனப்படுத்துகிறது. இத்தகைய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் மற்றும் தகாத உறவில் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் பல சிறிய குற்றங்களிலிருந்து பெரும் குற்றங்கள் வரை புரியவும் காரணமாகிறது.

எனவே இத்தகைய ஆபாசம் என்ற சமூக தீமையை ஒழிக்கும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜீன் 1 லிருந்து ஜீன் 7 வரை ஆபாசத்திற்கெதிரான பிரசாரத்தை செய்ய உள்ளது. ஆபாசத்தை ஒழித்து ஆரோகியமான சமூகத்தை உருவாக்குவோம்.

மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை காண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து மக்களை விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றியாளர்கள். (அல் குர்ஆன் 3.104.)

Popular Front of India - Media Team

Related

tamil nadu 4561779001921813490

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item