அமெரிக்கா ரவுடி நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது - PFI

உசாமா பின் லேடன் படுகொலையின் மர்மம் இன்னும் அகலவில்லை. செய்திகள் பெற ஒரே வழியாக மூலமாக அமெரிக்க ஊடகங்கள் மட்டுமே இருக்கும் வரை இந்த மர்மம் தொடரும். கிடைத்த செய்திகளை வைத்து பார்க்கும் போது, பலகீனமான நாடுகளின் மீது தனது மேலாதீக்கத்தை செலுத்தவும், வெட்கமேயில்லாமல் சர்வதேச சட்டங்களை மீறுவதிலும் பொதுவான நாகரீகமான நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலும் தான் நம்பர் ஒன் ரவுடி என்பதை மீண்டும் அமெரிக்கா நிரூபித்துள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் இடைவிடாத பிரச்சாரம் மற்றும் செய்திகளை பூதகரமாக்கி வெளியிடுவது என்ற போதிலும் நமக்கு தெரியவரக்கூடிய உண்மை, பென்டகன் மற்றும் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட உசாமா பின் லேடனை சர்வதேச தீர்ப்பாயம் (நீதிமன்றம்) அல்லது சௌதி அரேபியா கத்தார் ஆகிய நாடுகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்துவிடுகிறோம் என்று 2001 ஆம் ஆண்டிலேயே தாலிபன்கள் முன்வந்துள்ளனர் என்பதும் அதனை அமெரிக்கா மறுத்ததோடு மட்டுமில்லாமல் முதலில் ஆப்கானிஸ்தானையும் பின்னர் இராக் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்து லட்சக்கணக்கில் மக்களை கொன்று, பலரை முடமாக்கி அழித்தது, தீவிரவாத்த்திற்கெதிரான போர் என்று தவறாக பெயரிட்டு கணக்கேயில்லாமல் பல அப்பாவி பச்சிளங்குழந்தைகளை ஆதரவற்ற அனாதைகளாக்கியுள்ளது என்பதும் நமக்கு தெரியவந்துள்ளது.

அமெரிக்கா பிற நாடுகளின் இறையாண்மையை துச்சமென மதிக்க கூடியது சர்வதேச விதிமுறைகள் நடைமுறைகளையும், சிவில் மற்றும் மனிதஉரிமைகளை மீறி பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பான பல சிறைச்சாலைகளை (கான்சன்டிரேசன் கேம்ப்) நடத்திவருகிறது. குவான்டனாமோ பே எனுமிடத்தில் மட்டும் சுமார் 200 பேர் விசாரணையில்லாமல் பல வருடங்களாக மிருகங்கள் அடைத்து வைக்கப்படும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

சிஐஏ சேவை செய்யும் நாடுகளில் இரகசிய சிறைக்கொட்டடிகளை (டிட்டேன்சன் கேம்ப்) நிர்மாணித்து சித்திரவதை சேவைகளை செய்துவருவதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இறந்த உடலை கடலில் எறிவதென்பது நாகரீகமானதல்ல மத ஒழுங்கு மற்றும் நாகரீக வரம்புகளை மீறிய செயல். பல மதங்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுவருவதாக பராக் ஒபாமா கூறிக்கொண்டாலும் தற்போது அவை முஸ்லிம் உலகை வன்முறையை தூண்டச் செய்யும் கருவியாகதான் பயன்படுகிறது என்பது தெரியவருகிறது

எனினும் உசாமா பின் லேடன் கொலைக்கு பிறகு உசாமாவை தேடுகிறோம் என்று ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் இனிமேலும் தங்க இவர்களுக்கு அருகதையில்லை.
இந்த நவீன காலனியாதீக்க சக்திகள் ஒரு சதாம் ஹுஸைன் அல்லது ஒரு உசாமாவை கொல்வதன் மூலம், அந்நிய ஆதீக்க சக்திகளின் கொள்ளை சுரண்டல் மற்றும் ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு எதிரான மண்ணின் மைந்தர்களின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது.

வரலாற்றை ஆதாரமாக கொண்டால் நமக்கு தெரியவருவது, ஆக்கிரமித்திருக்கும் வெளிநாட்டினர் தங்களை காப்பாற்றிக்கொள்ள வீட்டுக்கு ஓடி செல்லும் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு ஓயாது தொடரும் என்று தெரியவருகிறது.

எல்லா வகை தீவிரவாத்த்தையும் கண்டிப்பதோடு, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் வல்லரசு நாடுகளின் மேலாதீக்கம் தோற்கடிக்கப்படும், எல்லா நாடுகளின் இறையாண்மையும் சுதந்திரமும் சமமாக பாதுகாக்கப்படும், அதன் மூலம் உலகம் அமைதியான சகாப்த்தம் நோக்கி வழிநடத்தப்படும் என்பதே மனிதகுலத்தின் சார்பாக எமது ஆழ்ந்த நம்பிக்கை என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம் அப்துல் ரஹ்மான்  பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular Front of India

Related

SDPI 51043906698314980

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item