தமிழக முதல்வருக்கு பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்டு 148 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மாநில பொதுச்செயலாளர் எம். நிஜாம் முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றத்தை விரும்பியே தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். மாற்றத்திற்கு வித்திடும் வகையில் மே 16 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகளும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது. மேலும் மின்சார தட்டுப்பாட்டினை சீர் செய்வது, வீடு கட்டுவதற்கு பண உதவி, நகரும் மருத்துவமனை போன்ற நிறைவேற்றப்படவிருக்கும் பல்வேறு வாக்குறுதிகளும் வரவேற்க தக்கவையாக உள்ளன. சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டினை 5 சதவீதமாக உயர்த்தும் வாக்குறுதியினை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென சிறுபான்மையினர் விரும்புகின்றனர் என்பதை இந்த தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் திட்டங்களை வகுத்து அதை சீராக நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதாஅவர்களின் தலைமையிலான அரசு முனைய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

Related

SDPI 2777774378078749411

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item