கடாபியின் இளைய மகன் கொல்லப்பட்டார்!

இது குறித்து இன்று லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராகிம் விடுத்துள்ள அறிக்கையில், நேட்டோ நாடுகளின் படைகள் நடத்திய வான்தாக்குதலில், அதிபர் கடாபியின் மகனான செய்ப்-அல்-அராப் கொல்லப்பட்டதாகவும், மேலும் கடாபியின் பேரக்குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் இறந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
தாக்குதல் நடக்கும் பொழுது கடாபியும், அவரது மனைவியும், தங்கள் மகனின் இல்லத்தில் இருந்ததாகவும், எனினும் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் இருவரும் பத்திரமாக வெளியேறியதாகவும் கூறியுள்ளார். செய்ப், கடாபியின் மகனாக இருந்தாலும், லிபிய ராணுவத்திலோ, அரசிலோ அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அவர் மீதான தாக்குதல் நேட்டோ படைகளின் போர்க்குற்றம் என்றும் கூறியுள்ளார் இப்ராகிம்.