அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும் - மகாதீர்
http://koothanallurmuslims.blogspot.com/2011/05/blog-post_4170.html
அல்காயிதா போராளி இயக்கத் தலைவர் உஸாமா பின் லேடனை கொலை செய்த பிறகு அவருடைய உடலை கடலில் வீசிய சம்பவம் அமெரிக்காவிற்கு எதிரான முஸ்லிம் உலகின் பகைமை உணர்வை அதிகரிக்கச் செய்யும் எனவும், மேலும் தாக்குதல்கள் அதிகரிக்க வழிவகை செய்யும் எனவும் முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதை விட அமெரிக்காவின் பழிவாங்கும் உணர்வே உஸாமா படுகொலையின் பின்னணியில் காணப்படுகிறது. உஸாமா குற்றவாளி என்றால் அவரைக் கொலை செய்ய ஒரு குழுவை அனுப்பி வைத்தது நீதிக்கு உகந்ததல்ல.
அவரை கைது செய்யத் தான் அவர்கள் முயற்சி செய்திருக்க வேண்டும். நிராயுத பாணியான ஒருவரை கொலைசெய்து அவருடைய உடலை கடலில் வீசி எறிந்தது நாகரீகம் உடையவர்களின் செயல் அல்ல என மகாதீர் முஹம்மது குற்றஞ்சாட்டியுள்ளார்.
Thoothu Online