34,343 பள்ளிகள் RSS-ஸி​னால் இந்தியாவில் நடத்தப்படு​கிறது

ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது. ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.

1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 34000 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 10,00,000 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை ‘சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்’ (அறிவுமிக்க, ஆரோக்கியமான, மற்றும் வளமான(!!!)) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஒரு இலட்சம் கிராம்ங்களை 2015க்குல் சென்றடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.

சங் பரிவார அமைப்புக்கு 2006 ஆம் ஆண்டு  2 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது  ஏகல் வித்யாலயா.அமெரிக்க அதிபர பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் ஏகல் வித்யாலயா என்ற  சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம் பெற்றிருக்கிறார் என சர்ச்சை கிளம்பியது.

வெளிநாட்டு நிதி:

யு.எஸில் இவ்வமைப்பு வேகமான முறையில் நிதி சேகரிக்கிறது.ஜூலை 2009 ஆம் ஆண்டு சிகாகோவில் 160000 டாலர்  நிதி சேகரித்தது.செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு சான் டிக்கொவில்  கலாச்சார  நிகழ்ச்சி மூலம் 14000 டாலர்  கொடுத்துள்ளது.மே 2010ல், 600 பேர் கலந்துக் கொண்ட சிகாகோ நிகழ்ச்சியில் 82525 டாலர் சேகரித்தது.அதே மாதத்தில் மத்திய அட்லாண்டிக் பகுதியில்,500,000 டாலர் ஐந்து கருணை இல்லம் மூலம்   நிதி சேகரித்தது.85 பள்ளிகளை 2004 மற்றும் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள அமைப்பு தத்து எடுத்துள்ளதுதேசிய இந்து மாணவர் அமைப்பு (UK) வெளிநாட்டு நிதி திரட்டலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

Thoothu Online

Related

VHP 6832498315277905618

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item