அமெரிக்க நிர்வாகம் உஸாமா படங்களை வெளியிட மறுத்துள்ளது


அமெரிக்க நிர்வாகம் நிராயுத பாணியாக இருந்த அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் படுகொலை செய்த காட்சிகள் அடங்கிய படங்களை வெளியிட மறுத்துள்ளது அமெரிக்க தேசிய பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவிக்கின்றது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று புதன் கிழமை இந்த முடிவை அறிவித்துள்ளார் இந்த முடிவுக்கு CIA உளவு அமைப்பின் தலைவர் பனெட்டா தவிந்த பாதுகாப்பு செயலாளர் ரோபட் கேட்ஸ் உட்பட ஏனைய உயர் மட்ட அதிகாரிகள் ஒபாமாவின்  முடிவை ஆதரித்துள்ளனர்.

அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் படுகொலை செய்யப்பட்டதை மீட்டும் உறுதி செய்த வெள்ளை மாளிகை அவரின் DNA பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்த வீட்டில் அமெரிக்கா தனது படுகொலையை அரங்கேற்றும்போது கொல்லப்பட்ட மூவரின் படங்களை வெளியிட்டுள்ளது அத்துடன் அமெரிக்கா கழுகுகள் பயணித்த சேதமடைந்து விழ்ந்த ஹெலிகொப்டர் படங்களையும் பின்னர் அந்த ஹெலிகொப்டர் அழிக்கப்பட்ட படங்களையும்  வெளியிட்டுள்ளது விரிவாக படங்கள் கோரமானவை

முன்னர் அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் படங்கள் என்று வெளியான படங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியானதாக நம்மப்படுகின்றது எனினும் அந்த படங்கள் அவர்தான் என்று உறுதி படுத்தபட்டவையல்ல என்பது குறிபிடத்தக்கது அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம் ஆவரின் பாவங்களை தவறுகளை அல்லாஹ் மன்னித்து அவருக்கு உயர்ந்த சுவர்கத்தை வழங்க பிராத்திப்போமாக.

அதேவேளை அமெரிக்கா படுகொலை நிகழ்த்திய வீட்டில் அஷ் சஹீத் உஸாமாவுடன் இருந்த அவரின் மகள் தனது தந்தை அமெரிக்க படையால் ஆயுதங்கள் அற்ற நிலையில் உயிருடன் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை அமெரிக்க படைகள் சுட்டு கொன்றதாக தெரிவித்துள்ளார் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக அல் அரபியா செய்தி தெரிவிக்கின்றது உஸாமா மகள் உட்பட இரு பெண்கள் , ஆறு சிறுவர் சிறுமியரை கைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்து பாகிஸ்தான் இராணுவம் கைது செய்தது இவர்களையும் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதும் அமெரிக்க கழுகுகள் வந்த ஒரு ஹெலிகொப்டர் இயங்க மறுத்தமையால் இவர்களை கடத்தி செல்ல முடியாது போயுள்ளது.

இதுவரை தாக்குதல்கள் வீடியோகள்    மற்றும் அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் படங்கள் என்று வெளியான படங்கள் அனைத்தும் போலியானவை, ஆனாலும் உண்மையான  வீடியோ மற்றும் படங்களை CIA இரகசியமாக வெளியிடும் என்று நம்பப்டுகின்றது.


Related

osama bin laden 8072512347901994012

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item