இஹ்வானுல் முஸ்லிமீன் மேற்கு நோக்கி நகர்கின்றது

எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் 16 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக தனது சூராவை- மத்திய ஆலோசனை சபையை – அதன் மொகட்டம் -Mokattam -புதிய தலைமையகத்தில் கூட்டுகின்றது.  கடந்த 1995  ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமான முறையில் சூரா நடைபெற்றபோது முபாரக்கின் படைகள் உட்புகுந்து அதன் தற்போதைய உபதலைவர் பொறியலாளர் ஹைராத் அல் சாதார் உட்பட பல முக்கிய உறுபினர்களை கைது செய்து சிறையில் தள்ளியது அதன் பின்னர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயங்குவதும் கூட்டங்களை நடத்துவதும் சட்டப்படி குற்றமாக பிரகடனப் படுத்தப்பட்டது மொத்தத்தில் அந்த அமைப்பு  முடக்கிவைக்கப்பட்டது .

முபாரக்கின் நிர்வாக காலத்தில் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் உறுப்பினர்கள் 36 ஆயிரம் பேர்வரை முபாரக் அரசின் சிறைகளில் அடைக்கபட்டனர் கடந்த 2010  ஆம் வருடம் கூட அதன் 6 ஆயிரம் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் சர்வாதிகாரி முபாரக் பதவி நீக்கப்பட்ட பின்னர் இஹ்வானுல் முஸ்லிமீன் சுதந்திரமாக இயங்க தொடங்கியுள்ளதுடன் விரிவாக அரசியல் கட்சி ஒன்றையும் பதிவு செய்துள்ளது இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்ப பகுதியில் ஒரு தொலைக்காட்சி அலைவரியையையும் தொடங்கவுள்ளதுடன் 16 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக தனது சூராவை உத்தியோகபூர்வமான கூட்டுவதுடன் ஒரு தேசிய பத்திரிகை ஒன்றையும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளது .

அதேவேளை தமது அமைப்பு தாம் புதிதாக உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் நலன் கருதி  தனது பிரதான நோக்கத்தை கைவிடாது என்று அதன் உபதலைவர்  ஹைராத் அல் சாதார் தெரிவித்துள்ளார்  புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியை நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வேறுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்துக்கு வெளியிலும் பிரமாண்டமான செல்வாக்கை கொண்டுள்ள  சக்தியாக தன்னை நிலைநிறுத்தி வருகின்றது அரபு முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்ற இடம்பெற்றுவரும் மக்கள் எழுச்சிக்கு பெரிதும் பங்களிப்புகளை வழங்கிவருகின்றது

துனீசிய ஜனாதிபதியாக இருந்த ஜைனுல் ஆபிதீன் பின் அலி மக்களால் விரட்டப்பட்ட பின்னர் துனிசியாவில் வரும் ஜூன் மாதம் தேர்தல்கள் நடைபெறவுள்ளது தூனீசியாவின் எதிர்க் கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் மாதிரியை கொண்ட அந்நஹ்ழா இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரும் இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளருமான ஷெய்க் ராஷித் அல் கனூஷி  22 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பி இருந்தார் அதாவது அங்கும் 22 ஆண்டுகளின் பின்னர் இஸ்லாமிய இயக்கம் பகிரங்கமாக இயங்க அனுமதி கிடைத்துள்ளது .

துனீசியவில் இஸ்லாமிய இயக்கம் பெரும் சக்தியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது நேற்று இடம்பெற்ற Tunisian Association of Young Lawyers. என்ற துனீசிய (தேசிய)  இளம் சட்டத்தரணிகள் அமைப்பின் ஒன்பது உறுப்பினர்களை தெரிவு செய்யவதற்கான அதன் தேர்தலில் 8 உறுப்புரிமையை அந்நஹ்ழா அமைப்பின் சட்டத்தரணிகள் கைப்பற்றியுள்ளனர்

அதேபோன்று சிரியாவிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் நேரடியாக மக்கள் எழுச்சியில் பங்குகொண்டுள்ளது சிரியா ஆர்பாட்டங்களுக்கு இஹ்வானுல் முஸ்லிமீன் பிரதான காரணம் என்று சிரியா அரசு கூறிவருகின்றது மறுபுறம் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சிரியாவின் தற்போதைய  நிர்வாகத்தை வீழ்த்த இஹ்வான்களுடன் அமெரிக்கா உடன்படிக்கையை செய்துள்ளது என்று பல படிகள் மேல்சென்று கூறிவருகின்றனர்.

ஜோர்டானில் இஹ்வான் மக்கள் ஆர்பாட்டங்களுக்கு தலைமை வகித்து வருகின்றது. ஜோர்டானில் அதன் பிரதான பாத்திரத்தை இஹ்வான்கள் பகிரங்கமாகவே கூறிவருகின்றார்கள் சர்வாதிகாரிகள் துரத்தப்பட்டால் சுதந்திரமாக மக்கள் விரும்பும் தீர்மானங்களை மேற்கொள்ளமுடியும் என்று உறுதியாக நம்புவதால் லிபியா உட்பட யெமன் சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு ஆதரவான மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர் .

இஸ்ரேலை சுழலவுள்ள அரபு முஸ்லிம் நாடுகளில் பெரும் அரசியல் சக்தியாக இஹ்வானுல் முஸ்லிமீன் எழுந்து வருவதை இஸ்ரேல் அனுமதிக்காது என்று அதன் வெளிநாட்டு அமைச்சர் பகிரங்கமாகவே கூறியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது மறுபுறம் இஹ்வானுல் முஸ்லிமீன் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த முயன்று வருவதுடன் அவர்களின் பிராந்திய நலன்களுக்கு தாம் எதிரானவர்கள் அல்லர் என்ற செய்தியை சொல்லிவருகின்றது.

இதன் காரணமாக லியியாவில் மேற்கு நாடுகளின் தலையீடு தொடர்பாக மேற்கு எதிர்ப்பு அரசியலை அது செய்யாது உள்ளது என்று நம்பப்படுகின்றது அல்லாஹ்வின் தூதர் மக்கா மற்றும் தாயிப் கால பகுதியில் காபீர்களின் பாதுகாப்பை பெற்றிருந்தார் என்ற வாதங்கள் லிபியாவின் போராளிகள் மேற்கின் ஆதரவை பெற வாய்பாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது.

அதேபோன்று பலஸ்தீனிலும் பாரிய செல்வாக்கை கொண்டுள்ளது மேற்கு கரை பிரதேசத்தில் மக்கள் அப்பாஸ் நிர்வாகத்துக்கு எதிராக எழுச்சி பெற்று இஹ்வானுல் முஸ்லிமீன் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புகளின் மாதிரிகளை கொண்ட இஸ்லாமிய சிந்தனை பெறாமல் இருக்கும் முகமாக அப்பாஸ் நிர்வாகம் பல தடை சட்டங்களை கொண்டுவந்துள்ளது நேற்று அப்பாஸ் நிர்வாகத்தின் மத விவகார அமைச்சர் மஸ்ஜிதுக்களின்  தமது அமைச்சால் எழுதிக்கொடுக்கப்பட்ட வரம்புகளுக்குள் நின்று போதனை செய்யாத இமாம்கள் தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை சுழலவுள்ள அரபு முஸ்லிம் நாடுகளில் பெரும் அரசியல் சக்தியாக இஹ்வானுல் முஸ்லிமீன் எழுந்து வருவதை இஸ்ரேல் அனுமதிக்காது   என்று கூறியும் செயல்பட்டும் வரும்போது மறுபுறம் இஹ்வானுல் முஸ்லிமீன் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த முயன்று வருவதுடன் மேற்கு பிராந்திய நலன்களுக்கு தாம் எதிரானவர்கள் அல்லர் என்ற செய்தியை சொல்லிவருகின்றது.

இன்றுவரை இஸ்ரேல்  மேற்கு நாடுகளை தனது வேலைத்திட்டங்களுக்கு சாகதமாக பயன்படுத்தி வரும் அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் மேற்கு நாடுகள் தொடர்பில் புதிய அணுகுமுறைகளை கொண்டு செயல்படுவது இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக மாறிவருகின்றது.

மேற்கையும் நாம் பயன்படுத்துவோம் என்ற முனைப்புடன் இஹ்வானுல் முஸ்லிமீன் முயல்வதாக தெரிகின்றது இது நிச்சயம் இஸ்ரேலுக்கு மேற்கை பயன்படுத்துவதில்  ஒரு பெரும்  போட்டியாளரை உருவாக்கியுள்ளது இது மேற்கு உலகிற்கு மேலும் பல அனுகூலங்களை கொண்டுவரும் தற்போது  இஹ்வானுல் முஸ்லிமீன் பிராந்திய அரசியலில் எடுக்கும் தீர்மானங்கள் கையாலபோகும் அணுகுமுறைகள் அதன் அரசியில் நகர்வுகள், காய் நகர்த்தல்கள் மிகவும் முக்கியத்துவம் கொண்டவையாகும்.

அதேநேரம் இஹ்வானுல் முஸ்லிமீன் தனது அரசியல் பிரிவை தனியாக பிரிக்க போவதாக அறிவித்துள்ளது ஆனாலும் அதன் நிர்வாக உறவுகள் பற்றிய விளக்கம் தரப்படவில்லை இது அரசியல் தளத்திலும் ஒரு  இஸ்லாமிய இயக்கமாக சமூக தளத்திலும்  வேறுபட்டதும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததும் இறுதில் முந்தியது பிந்தியதற்கு பாலமாக அமையும் விதமாகவும் தனது செயல்திட்டங்களை வடிவமைக்க போவதாக தெரிகின்றது இந்த மாற்றங்கள் அந்த  பிராந்தியதிலும்  ஏனைய பிராந்தியங்களிலும்  புதிய அரசியல் சூழலை உருவாக்க வழிகாட்டலாம் என்பதாக ஊகிக்க  முடியும்.

Related

iqwaan 5534729672109910806

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item