உஸாமா பின் லேடன் மரணம்-அமெரிக்கா தகவல்
http://koothanallurmuslims.blogspot.com/2011/05/blog-post_6147.html
அல்காயிதா போராளி இயக்கத்தின் தலைவர் உஸாமா பின் லேடன் மரணித்துவிட்டதாகவும், அவருடைய உடல் அமெரிக்கா வசம் உள்ளதாக அமெரிக்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுக்குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரைவில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
உஸாமா பின் லேடன் அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாக கருதப்பட்டார் அவர்.அவரை பிடிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா லட்சத்திற்குமேற்பட்ட ராணுவ வீரர்களுடன் ஆப்கானை ஆக்கிரமித்து அப்பாவிகளை கொலைச்செய்துவருகிறது.இந்நிலையில் உஸாமா பின் லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பாகிஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையின்போது சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.