சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது

சமாதான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் இயக்கத்தை சேர்க்க இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும்,அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகு ஒபாமாவை சந்தித்து பேசிய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

ஹமாஸும், பத்தாஹும் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சூழலில் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது. இஸ்ரேலுடனான சமாதானமா? ஹமாஸ்-ஃபத்தாஹ் இடையேயான ஐக்கியமா? பெஞ்சமின் நெதன்யாகு திமிர்த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார். அல்காயிதாவின் ஃபலஸ்தீன் பதிப்பான ஹமாஸை சமாதானத்தின் பங்காளியாக காணவியலாது என கூறுகிறார் அவர். இஸ்ரேலை அங்கீகரிக்காமல் ஹமாஸை அமைதிக்கான பங்காளியாக கருத முடியாது என ஒபாமாவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், நாங்கள் இஸ்ரேலுக்காக பாடுபடவில்லை. மாறாக, ஃபலஸ்தீனுக்காக செயல்படுகிறோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 20வருடங்களுக்கு மேலாக நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு செலவழித்துள்ளோம்.

ஃபலஸ்தீனிகளை பொறுத்தவரை இவை தாராளமாகும். ஹமாஸ் போராடுவது ஃபலஸ்தீனர்களுக்கும், அவர்களின் மண்ணை விடுவிக்கவும், சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்குமாகும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடரும் வேளையில் நாங்கள் கைக்கட்டி அதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் எனக்கூறினால் அது நடக்காது என ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் காஸி ஹமத் தெரிவித்துள்ளார்.

Thoothu Online

Related

Isreal 6352582881384660225

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item