முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பொதுமக்களிடமிருந்து நிதியுதவியை பெறும்
http://koothanallurmuslims.blogspot.com/2011/05/blog-post_4878.html
பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் பொது மக்களிடமிருந்து நிதியுதவியை பெறும். மனுக்களை தாக்கல் செய்யவும், வழக்கறிஞர்களுக்குரிய கட்டணத்திலும் அதிகரித்துள்ள நீதிமன்ற செலவுகளை ஈடுகட்ட நிதியுதவி கோரப்படும் என மூத்த வழக்கறிஞரும், முஸ்லிம் தனியார் சட்டவாரிய நிர்வாக குழு உறுப்பினருமான ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக கடந்த ஆண்டு லக்னோவில் நடந்த தனியார் சட்டவாரிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து நன்கொடையை பெறுவதற்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. எனினும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஜீலானி தெரிவித்தார்.