தாக்குதலை மீண்டும் வலுப்படுத்துவோம் தாலிபான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் முக்கிய இடங்களில் மீண்டும் தாக்குதலை வலுப்படுத்தப்போவதாக தாலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "பத்ர்" என்று பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் அலுவலகங்கள், ராணுவ மையங்கள்,விமானப்படை மையங்கள், ஆயுத கிடங்குகள், மக்கள் திரளும் இடங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும்.

இத்தாக்குதல் மூத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆக்கிரமிப்பு படையினருக்காக பணியாற்றுபவர்கள், வெளிநாட்டு கம்பெனிகளின் தலைவர்கள் ஆகியோரை குறிவைத்து நடத்தப்படும் என தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதிகமான சேதங்கள் ஏற்படுவதை தடுக்க மக்கள் எதிரிகளின் மையங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தாலிபான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 ஆனால், தாலிபானின் தாக்குதல்கள் ஒருவாரமே தொடரும் எனவும், இத்தாக்குதல் வெற்றிப்பெறாது என நேட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தாலிபானின் புதிய முன்னேற்றங்கள் குறித்து ஹிலாரி கிளிண்டனும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஹிலாரியின் இவ்வறிவிப்பு அமெரிக்கா முன்னர் அறிவித்ததை விட அதிக காலம் அந்நிய படையினர் ஆப்கானில் தங்குவதற்கான தந்திரமாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஆப்கானில் தற்போது ஒன்றரை லட்சம் அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் உள்ளனர்.ஆனால்,முந்தைய வருடங்களை விட தற்போது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

Thoothu Online

Related

Taliban 5741162929378906678

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item