மன்ப உல் உலா பள்ளி +2 தேர்வில் 100 % தேர்ச்சி

நமதூர் மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் +2 தேர்வில் 100 % வெற்றிபெற்றுள்ளனர் (79 மாணவர்கள் தேர்வெழுதி 79 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்). இதில் வாஹிது ஜமான் முதலிடம் (மார்க் 1127) அல்ஹம்துலில்லாஹ்...

இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸ்போர்ட் ஆங்கில மேனிலை பள்ளி 90 % (அதாவது 39 மாணவ மாணவிகளில் 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்) இப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி K.H.உவைதா பெனாசிர் (1098 மார்க்) 

இதனை தொடர்ந்து நமதூர் அரசினர் பெண்கள் மேனிலை பள்ளி மாணவிகள் 71 % வெற்றி பெற்றுள்ளனர் (182 மாணவிகளில் 129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்)

கடைசியாக நமதூர் அரசினர் ஆண்கள் மேனிலை பள்ளி மாணவர்கள் 27 % தேர்ச்சியடைந்துளனர்.

மன்ப உல் உலா தாளாளர் T.M.தமிஜுதீன் அவர்களையும் தலைமை ஆசிரியர் T. உதய குமார் அவர்களையும் ஏனைய ஆசிரிய பெருந்தகைகளையும் மன்ப உல் உலா சபையையும் கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் இணையதள குழுமம் மூலமாக பாராட்டுகிறோம்.

அதிக மதிப்பெண் பெற்று நம் சமுதாயத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவ,  மாணவியருக்கு கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் இணையதள குழுமம் பாராட்டுகளை தெரிவிப்பதுடன் இன்னும் மேன்மேலும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்.

நன்றி : அப்துல் அலீம்

Related

manba-ul-ula 3497940898029861191

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item