இஃவான்கள்-ஸலஃபிகள் இணைந்து நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

எகிப்தில் ஹரம் மாவட்டத்திலுள்ள கிஸாவில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினரும், ஸலஃபி முஸ்லிம்களும் இணைந்து நடத்திய பேரணியில் 50 ஆயிரத்திற்குமேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ’இஃவான்களும் ஸலஃபிகளும் ஒன்றே! அனைவர் விரும்புவதும் இஸ்லாமிய ஷரீஅத்தை நடைமுறைப்படுத்தவதையே!’ என முழக்கமிட்டனர்.

பேரணியில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய பிரபல ஸலஃபி பிரச்சாரகர் ஸஃப்வாட் ஹெகாஸி கூறுகையில்,’ஐக்கிய அரபு நாடுகளும், ஐக்கிய இஸ்லாமிய நாடுகளும் உருவாவது தவிர்க்க முடியாதது. விரைவில் நாங்கள் ஒரே கலீஃபாவின் ஆளுகையின் கீழ் வருவோம்.’ என தெரிவித்த ஹெகாஸி, இம்பாபாவில் சர்ச்சை எரித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.’அவர்கள் ஸலஃபிகளும் அல்லர். இஃவான்களும் அல்லர். ஏன் அவர்கள் எகிப்தியர்களும் அல்லர்.அவர்கள் பிரிவினை மோதலை தூண்டும் எதிரிகள்’ என குறிப்பிட்டார்.

இன்னொரு ஸலஃபி பிரச்சாரகர் முஹம்மது ஹஸ்ஸன் கூறுகையில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றுப்பட்டுள்ளனர் என்பது குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.  இஸ்லாம் காப்டிக் கிறிஸ்தவர்களை பாதுகாக்கிறது. அவர்கள் அமெரிக்காவை நாடத் தேவையில்லை’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related

salafi 7509526725565627419

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item