புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கு​ம் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்

எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், புதிய அரசியல் கட்சி ஒன்றை அமைத்துள்ளது. முபாரக் ஆட்சியில் போடப்பட்ட தடை சட்டங்களால் அது போன்ற கட்சி ஒன்றைத் துவக்க விருப்பம் இருந்த போதிலும் செயல்படுத்த முடியாமல் போனதாக அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி துவங்கப்பட்டதாக மத்திய ஆலோசனை சபை அறிவித்துள்ளது. தமது அமைப்பு தாம் புதிதாக உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் , நீதிக்குமான அரசியல் கட்சியின் நலன் கருதி அமைப்பு தனது பிரதான நோக்கத்தை கைவிடாது என்று அதன் உப தலைவர் பொறியாளர் ஹைராத் அல் சாதார் தெரிவித்துள்ளார்.

கட்சி சுயமாக செயல்படும் என்றும், ஆனால் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்போடு இனக்கமாக செயல்பட்டு வருகின்ற தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தின் அரைவாசி இடங்களை இலக்குவைத்துப் போட்டியிடவுள்ளதாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் 30வீதமான இடங்களுக்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் தலைவராக முஹமூத் முஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சி மதசார்பான கட்சி அல்லவென்றும், இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கப்பட்டது எனவும் அதன் தலைவர் முஸ்ரி தெரிவித்தார். இந்த கட்சியில் கிறிஸ்தவ, முஸ்லிம்கள் இணையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடை பெறவுள்ளது.

எகிப்தில் தற்போதைய நிலையில் தேசிய மட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரே அமைப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முந்தைய தேர்தல்களில் சுயேட்சையாகவே போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் நடந்த புரட்சிக்கு பிறகு, காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்  என இவ்வமைப்பு இராணுவ கவுன்சிலை கேட்டுகொண்டது.

பின்னர் எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டு  வர முக்கிய தீர்மானம் எடுக்க போவதாக தெரிவித்துருந்த அவர், தற்போது தெரிவித்துள்ள தகவலில் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Thoothu Online

Related

ISLAMIC PARTY 6121154267483878428

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item