யூசுஃப் அல் கர்தாவி மருத்துவமனையில் அனுமதி

தற்கால உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் கத்தரில் வசித்து வரும் ஷேக் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி. சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவராக பதவி வகிக்கும் கர்தாவி அவர்கள் தற்போதையை அரபுலக புரட்சியில் ஆதிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக உறுதியான குரலை எழுப்பி வருபவர். எகிப்தில் பிறந்த 84 வயதான கர்தாவி மருத்துவமனையில் உடல் நிலை பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கத்தரிலிருந்து வெளிவரும் அல் ஷர்க் பத்திரிகை தெரிவிக்கிறது.

வழக்கமாக கத்தர் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள உமர் பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கும் கர்தாவி கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தவரவில்லை. கர்தாவியின் உடல் நிலையைக் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை என அப்பத்திரிகை கூறுகிறது. கர்தாவி அவர்களின் உடல் நிலையைக் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதை அவருடன் நெருங்கிய தொடர்புடைய மார்க்க அறிஞர் ஒருவர் மறுத்துள்ளார். அவருக்கு சளி பிடித்திருப்பதால் ஓய்வு தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

யூசுஃப் அல் கர்தாவிக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் நாடுகளில் நுழைய தடை விதித்துள்ளன. சமீபத்திய எகிப்து பகிரங்க ஆதரவை தெரிவித்த கர்தாவி அங்கு ஹுஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு நடந்த ஜும்ஆவில் 30 ஆண்டுகளுக்கு பின்னால் கலந்து கொண்டு தலைமை வகித்தார். லிபியாவின் சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக பத்வா வழங்கிய கர்தாவி சிரியாவின் ஏகாதிபத்திய அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக கடுமையான விமர்சனத்தை  வெளியிட்டார்.

ஆனால் பஹ்ரைனில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தை பிரிவினை கிளர்ச்சி என கர்தாவி வர்ணித்தார். இதற்கு ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷேக் கர்தாவி அவர்கள் உடல் நிலைதேறி மீண்டும் இஸ்லாத்திற்காக சேவை புரிய இறைவனிடம் பிரார்த்திப்போம்.


Thoothu Online

Related

qatar 3838410962320068410

Post a Comment

  1. சுய இன்பம் கூடும். முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு முஸ்லிம்களும் வாழ்த்துசொல்ல முடியும் . இதுபோன்ற நல்ல நல்ல பத்வாக்களை(?) வழங்கி இஸ்லாத்திற்(கெதிரா)காக சேவை புரியட்டும்

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item