அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா

இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக (ironclad) வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எதிர்கால கொள்கை தொடர்பில் ஆற்றிய பிரதான உரையின் போது தெரிவித்த இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாகவோ பலஸ்தீன இறையாண்மை தேசம் உருவாக்குவது தொடர்பிலோ எந்த கருத்தையும் வலுவாக முன்வைக்காது முழுமையாக இஸ்ரேலின் புனித பாதுகாவலனாக மட்டும் உரையாற்றியுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாக தனது வியாழகிழமை கருத்துக்கு இஸ்ரேலுக்கு சார்பான மெழுகு பூசும் விளக்கத்தை கொடுத்துள்ளார் என்றும் எல்லைகள் தொடர்பில் இருதரப்பும் பேசவேண்டும் விட்டுகொடுப்புகளை செய்யவேண்டும் என்றும் தெரிவித்து தொடர்ந்தும் அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பான பிடிவாதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன இதற்கு பதில் தெரிவித்த பலஸ்தீன தரப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன தேசத்தை உருவாக்க ஐநா பொது சபையின் அங்கீகாரம் கோரபோவதாக தெரிவித்தது.

இதற்கு பதிலடியாகத்தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஐநா சபையின் வாக்குகள் ஒரு போதும் பலஸ்தீனை உருவாக்காது “No vote at the United Nations will ever create an independent Palestinian state, என்றும் இஸ்ரேலை ஐநாவில் இருந்து வெளியேற்றவோ அல்லது எந்தவொரு சர்வதேச போரத்தில் இருந்து வெளியேற்றவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேலுடன்  இருக்கும் ஏனென்றால் இஸ்ரேலின் சட்டபூர்வ தன்மை விவாதத்திற்கு உரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த உரையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பில் உரையாற்றிய ஒபாமா பலஸ்தீனர்கள் கைதியாக பிடித்து வைத்துள்ள ஒரு இஸ்ரேல் சிப்பாய்க்கு அதரவாக அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர் இஸ்ரேலின் வதை முகாம்களில் வதைக்கப்படும் பலஸ்தீன சிறுவர் ,சிறுமியர், ஆண்கள் பெண்கள் ,நோயாளர்கள் , வயோதிபர்கள் என்று சுமார் 7 ஆயிரம் பேர் பற்றி எதுவும் பேசவில்லை என்பது ஒபாபாவின் இஸ்ரேல் ஆதரவு பயங்கரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Related

Palestine 5649275721550957567

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item