ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.

SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம். இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி.

புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.

இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.

ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,"அதுவல்ல, இது தான் பாதை" என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக.

Related

SDPI 1026530294277398581

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item