பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை

இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித் தொகையானது வட்டியில்லா கடனாகும். உதவித் தொகையை பெறும் பயனீட்டாளர்கள் படிப்பை முடித்த பிறகு வேலையில் சேர்ந்தால் அல்லது படிப்பை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இத்தொகையை எளிதான தவணை முறைகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

இலவசமாக வழங்காமல் கல்வி உதவித் தொகையை கடனாக வழங்குவதற்கு காரணம் தேவையுடைய ஏராளமான மாணவர்கள் இதன் மூலம் சுழற்சி முறையில் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கமாகும்.

+2க்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு குறையாத டிகிரி, டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வட்டியில்லா கடன் உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு அனுமதி பெறாத கல்வி நிலையங்களில் பயில்வோர் இந்த கடன் உதவித்தொகையை கேட்டு விண்ணப்பிக்க இயலாது.

இந்த ஆண்டு டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மேற்குவங்காளம், மணிப்பூர், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சார்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த வட்டியில்லா கடன் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை popularfrontindia.org என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் (Download) செய்யலாம். ஜூலை மாதம் 20-ஆம் தேதி விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அளிப்பதற்கான கடைசி தினமாகும். இத்திட்டத்திற்கு 24 லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

Related

SDPI 5729222960157185682

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item