துருக்கி ,எகிப்து ஆகியவற்றின் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் சந்திக்கின்றன
http://koothanallurmuslims.blogspot.com/2011/06/blog-post_20.html
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் Freedom and Justice Party (FJP) பிரதிநிதிகள் துருக்கி சென்று பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் The Justice and Development Party (AKP) தலைவர்களை சந்தித்து கட்சின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளனர் என்று இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தில் கட்சியின் தலைவர் Dr. Mohamed Morsy மற்றும் அதன் பொது செயலாளர் Dr. Saad Katatny ஆகியோர் செல்லவுள்ளனர் இதன்போது இரு கட்சிகளுக்கு இடையிலான மிகவும் நெருக்கமான உறவுப்பாலம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது என்று எகிப்து தகவல்கள் தெரிவிக்கின்றது விரிவாக
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி எகிப்து நாட்டுக்கு புதிதாக இருந்தாலும் அது சிறந்த அரசியல் அனுபவங்களை கொண்டது பாராளுமன்றத்தில் 80 வரையான உறுபினர்களை கொண்டுள்ளது முழுமையான இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளை கொண்டியங்குகின்றது.
அதேபோன்று துருக்கியின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான AKP கட்சி இஸ்லாமிய அடித்தளத்தை கொண்டுள்ள அதேவேளை மற்ற அரசியல் இஸ்லாமிய இயக்கங்களுக்கு புறம்பான அரசியல் அணுகு முறைகளை கடைபிடித்து மூன்றாவது தடவையாகவும் துருக்கியில் வெற்றிபெற்றுள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் அர்பகான் தலைமையிலான AKP கட்சி பாரிய வெற்றியை பெற்றுகொண்டுள்ளது இந்த AKP கட்சி – 50.% வாக்குகளை பெற்று, 21,465,541 கோடி வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க 326 ஆசனங்களை பெற்றுகொண்டுள்ளது இந்த இரண்டு கட்சிகளும் தற்போது பகிரங்கமான உறவை பேணிக்கொள்ள முன்வந்துள்ளது .
எகிப்தில் மிகவும் விரைவில் எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன் அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்கப்படுகின்றது.
Our Ummah