ஹிந்துதுவாவின் சூழ்ச்சியை முறியடிக்க வருகிறார் ராகுல் காந்தி

"மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், போலிசாமியார் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இவர்களின் போராட்டத்தால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாகவும், அன்னா ஹசாரே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற தனிப்பட்ட நபர்கள், தங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரசுக்கு இணையான, அதிகாரமிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, நெருக்கடி கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இவர்களின் போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஹிந்து தீவிரவாத அமைப்புகளும், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், தடுத்து நிறுத்தி விட முயற்சிக்கின்றனர். பா.ஜ., முகமூடியை அணிந்து கொண்டு, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் போராட்டங்களை, இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.இவர்களுக்கு எதிராக, தீவிரமாக செயல்படுவதற்கு, காங்., பொதுச் செயலர் ராகுலை களம் இறக்க வேண்டும்.

ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய இணை அமைச்சரும், உ.பி., மாநில காங்., மூத்த தலைவருமான பெனி பிரசாத் வர்மா கூறுகையில், "அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் முயற்சிகளை முறியடிக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களுக்கு எதிராக, ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சி மேலிடம் அனுமதிக்க வேண்டும்' என்றார்.

Related

Rahul 3712474099885058327

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item