11,000 தீவிரவாதிகளை உருவாக்க பயங்கரவாத ராம்தேவ் திட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2011/06/11000.html
அடுத்த முறை நாங்கள் போராட்டம் நடத்தினால், ஆயுதமேந்துவோம். எங்களைத் தாக்குவோரைத் திருப்பித் தாக்குவோம். இதற்காக 11,000 பேர் கொண்ட ஆயுத படையை உருவாக்குவோம், அனைவருக்கும் ஆயுத பயிற்சி அளிப்போம் என்று கூறியுள்ள பயங்கரவாதி பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் பயங்கரவாதி ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அடுத்த முறை போராடும்போது வெறும் கையுடன் வர மாட்டோம். 11,000 ஆண், பெண்களைக் கொண்ட ஆயுத படையை உருவாக்குவோம்.
அடுத்து ராம்லீலா மைதானத்தில் ராவண லீலாதான் நடைபெறும். எங்களை யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் 20 ஆண்களையும், 20 பெண்களையும் தேர்வு செய்து அவர்களை ஊழலுக்கு எதிரான போர்ப்படையாக உருவாக்குவோம். இவர்கள் 35 முதல் 40 வயது கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களை படை போல தயாரிப்போம். இது ஒரு ராணுவம் போல செயல்படும் என்றார் ராம்தேவ்.
இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராம்தேவின் இந்தப் பேச்சை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இது தேச விரோத பேச்சாகும். இதுகுறித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் அவர்.
இது போலே பயங்கரவாத செயல் திட்டத்துடன் செயல் படும் போலி சாமியார்களையும் இவர்களுக்கு ஆதரவாக செயல் படும் பாசிச தீவிரவாத அமைப்பான RSS மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யுமா என்பதே நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வி...