கோவையில் பாரதீய சேனா அமைப்பினர் இருவர் கைது...

காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள காந்தி பூங்காவில், காந்தியடிகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப் பகுதி தனியே உடைந்து விழுந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு, ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தில்லியில் உண்ணாவிரதத்தில் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப் பகுதியில் பதற்றம் நிலவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.  பூங்கா காவலாளி, அப் பகுதியைச் சேர்ந்தவர்களின் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், நாகராஜ் ஆகியோரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வேலு என்பவரைப் தேடி வருகின்றனர்.
Muthupet - Popular Front of India

Related

RSS 2191625563890848223

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item