தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் - MMK
http://koothanallurmuslims.blogspot.com/2011/06/mmk.html
"மனிதநேய மக்கள் கட்சியை வலுப்படுத்துங்கள் உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
மத, இன பாகுபாடுகளை ஒழித்து தமிழக மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்க பட்ட கட்சிதான் ம.ம.க. என்றார் அவர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான்.
எல்லா தரப்பு மக்களுக்கும் வேண்டி இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் நடத்தி வருகிறோம். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.
பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம். இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம்.