பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI
http://koothanallurmuslims.blogspot.com/2011/06/cbi.html
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்து, முஸ்லிம் சகோதரிகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.
இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தாம் சகோதரி பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார்.இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.