முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கட்சிக்கு அங்கீகாரம்

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் சட்டரீதியான அந்தஸ்தை பெற்றுள்ளது.இதனால் செப்டம்பரில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பல ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்க உறுப்பினர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கடந்த பெப்ருவரி மாதம் மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் விளைவாக ஹுஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்ட எகிப்தில் இயக்கரீதியான கட்டுக்கோப்புடன் செயல்படும் அமைப்புதான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்.1928-ஆம் ஆண்டு இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் 1954 ஆம் ஆண்டுமுதல் தடையை சந்தித்துவருகிறது.

ஆனால், தொடர்ந்து சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டுவருகின்றார்கள்.2005-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 20 சதவீத வாக்குகளை இவ்வியக்கத்தின் சுயேட்சை வேட்பாளர்கள் பெற்றனர்.நாட்டின் 50 சதவீத மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக இயக்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெண்கள் ஆகியோருக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள கட்சிதான் ப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி என தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Thoothu Online 

Related

muslim brotherhood 2268682128164656599

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item