பா.ஜ.கவை ஆதரிக்க தயார்! உ.பி முஸ்லிம் அமைப்பு தகவல்!

உத்திரபிரதேசத்தில் வருகின்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.கவை ஆதரிக்கப்போவதாக அங்குள்ள முஸ்லிம் அமைப்பான பஸ்மந்தா முஸ்லிம் சமாஜ் (பி.மு.ச) தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தங்களுடைய சமுதாயத்தினுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பஸ்மந்தா முஸ்லிம் சமாஜ் அறிவித்துள்ளது.

சமீபத்தில் லக்னோவில் பீட்டர் மஹாலில் வைத்து நடைபெற்ற அவ்வமைப்பின் ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியின் போது அவ்வமைப்பின் மாநில தலைவர் அனீஸ் மன்சூரி இதனை தெரிவித்தார். அவர் கூறும் போது அரசியல் களத்தில் பா.ஜ.கவை தீண்டத்தகாத கட்சியாக நாம் கருதக்கூடாது,  பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகவே நாங்கள் இவ்வமைப்பை தொடங்கியுள்ளோம். அந்த முன்னேற்றம் பா.ஜ.கவினால் தான் ஏற்படமுடியும் என்று இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆதரிக்க ஒரு போதும் நாங்கள் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.



பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் செயல்படுவோம், வியாபாரம், கல்வி, தொழில்துறை, அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர். பா.ஜ.க தங்களுடைய ஆட்சயின் கீழ் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான வசதிகளை செய்து தரும் பட்சத்தில் அவர்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவளிப்போம் என அவர் கூறியுள்ளார். ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம்களுக்கு சிறிது அளவே வசதிகளை செய்துள்ளது என்றும், அந்த அரசாங்கத்தை பொருளாதாரத்தில் மிகைத்து விழங்கும் முஸ்லிம்கள் தவறான பாதையில் அழைத்துச்செல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அதே போன்ற ஒரு நிலை உத்திரபிரதேசத்திலும் ஏற்பட வேண்டும் என்று கூறினார்.
"புலி பசித்தாலும் புல்லைத்திண்ணாது!" என்பது பழமொழி!
பா.ஜ.க தோற்றாலும் முஸ்லிம்களுக்காக உழைக்காது என்பது புதுமொழி!

கருவருக்கத்துடிக்கும் வெறியர்களிடமே சமுதாயத்தை அடகு வைப்போம் என்ற நிலையில் தான் இவர்களைப்போன்ற இஸ்லாமிய அமைப்புகள் என்று தங்களை கூறிக்கொண்டு திரியும் இத்தகைய மதிக்கெட்டவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றது. இதனால் வரை பா.ஜ.க இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி செய்துவருகிறதே! அங்கேயெல்லாம் எத்தகைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்? என்பதை இந்த மூடர்கள் சிந்திக்க வேண்டும். உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு அதே இடத்தில் ராமர் கோயிலை கட்ட துடியாய்த்துடிக்கும் இத்தகைய கையவர்களா முஸ்லிம் சமுதாயத்தினை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லப்போகிறார்கள்? முஸ்லிம் சமூகம் பா.ஜ.கவை ஒதிக்கி வைத்தது போல் இத்தகைய பெயர்தாங்கி அமைப்புகளையும் ஓரங்கட்டவேண்டும்.


Thanks : Muthu

Related

RSS 1255916716005295715

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item