SDPI-ன் துறைமுக தொகுதி வேட்பாளர்
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/sdpi_22.html
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் |
வருகின்ற தமிழக் சட்டமன்றத் தேர்தலை எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்தன்மையுடன் SDPI 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதில் ஒரு தொகுதியான சென்னை துறைமுகம் தொகுதியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் வகையிலும், அத்தொகுதியின் செயல்வீரர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியையும் நேற்று மாலை 7.00 மணி அளவில் சென்னை ராயபுரத்தில்
மாநிலத் தலைவர் அவர்களுடன் துறைமுகம் வேட்பாளர் அமீர் ஹம்ஜா |
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மா நில செயற்குழுவால் முடிவு செய்யப்பட்டு, வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா அவர்கள் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு அவரை அனைவர் முன்பும் அறிமுகம் செய்து வைத்தார் மா நில தலைவர். இறுதியாக மா நில
தலைவர் உரையாற்றும்போது, எஸ்.டி.பி.ஐ-ன் வளர்ச்சி இன்று ஆளும் அதிகார வர்க்கட்திற்கு பெறும் தலைவலியாக இருக்கிறது என்றும், தொடங்கப்பட்டு 1 1/2 வருடங்களே ஆனாலும் இந்தியாவில் தவிர்க்கமுடியாத சக்தியாக எஸ்.டி.பி.ஐ மாறி வருவதை சுட்டிக்காட்டினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை தைரியத்துடனும் உத்வேகத்துடன் சந்திக்க வேண்டும், வெற்றியோ தோழ்வியோ எதுவாயினும் மனம் தளர்ந்து விடாமல் சமூகத்திற்காக பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கும் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி |
இறுதியாக ஆர்.கே நகர் தொகுதி செயலாளர் ரத்தினம் அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
SDPI - CHENNAI