லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த PFI வலியுறுத்தல்
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/pfi_22.html
இதற்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள், அமைப்புகள் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்து வருகின்றன. இந்தியாவில் பெருந்திரள் மக்கள் இயக்கமாக செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா லிபியாவின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு சமாதான பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:’ஏதேனும் ஒரு நாட்டில் ஏற்படும் உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டுப் படையினர் தலையிடுவது அந்நாட்டின் இறையாண்மையின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிக்கு காரணம், கத்தாஃபியின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று அரசியல் சீர்திருத்தங்களை பெறுவதற்காகும்.மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் கத்தாஃபியின் நடவடிக்கை எதிர்க்க வேண்டியதும்,கண்டிக்கத்தக்கதுமாகும். ஆனால், இதனை சாக்காக வைத்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படையினர் லிபியாவின் மீது தொடுத்துள்ள தாக்குதலை ஏற்றுக்கொள்ளவியலாது.
பல நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் வலுக்கட்டாயமாக தலையிட்ட அமெரிக்காவின் கடந்த கால அனுபங்கள் கசப்பானதாகும். உள்நாட்டு மக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில்தான் அந்நாடுகளின் உள் பிரச்சனைகளில் அமெரிக்கா தலையிட்டது. ஆனால், உண்மையில் அமெரிக்காவின் நோக்கம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அந்நாடுகளின் வளங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுமாகும். இதனை நாம் ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்கிலும் கண்டோம்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படையினர் நடத்திவரும் விமானத் தாக்குதல் மூலம் லிபியாவில் கத்தாஃபிக்கு எதிரான பெருந்திரள் மக்கள் எழுச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதோடு அந்நாட்டை யுத்த பூமியாக மாற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இதில் தலையிட்டு அமெரிக்கத் தலைமையில் லிபியாவின் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.
லிபியாவில் அரசுக்கெதிராக போராடி வரும் உள்நாட்டு குழுக்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கி அந்நாட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கு உடன்பாடான பங்கை ஆற்ற ஐ.நா தயாராக வேண்டும்.
இந்தியா லிபியாவுடன் வலுவான தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள நாடாகும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வெளிநாட்டுப் படையினரை லிபியாவுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் இந்தியா வெறும் ஒரு பார்வையாளராக மட்டும் இருக்காமல் தூதரக ரீதியிலான வழிகள் மூலம் லிபியாவின் உள்நாட்டு பிரச்சனையை தீர்க்க உதவவேண்டும். இந்திய அரசு, லிபியாவில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக நேர்மறையான நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டில் போராடும் பிரிவனர்களிடையே நடுநிலையான பங்கினை ஆற்ற முன்வர வேண்டும்.’ இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
POPULAR FRONT OF INDIA