தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 மாநிலங்களில் SDPI

சவூதி அரேபியாவுக்கு வருகைப்புரிந்துள்ள இ.அபூபக்கர் கல்ஃப் தேஜஸுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: "வாய்ப்புள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி SDPI-ன் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவை தேடுவதே லட்சியமாகும். கட்சி முன்வைக்கும் அரசியல் சித்தாந்தத்தை அங்கீகரிக்கும் விதத்தில் தேர்தலை பயன்படுத்துவோம்.
இந்தியாவில் ஜனநாயகம் விற்பனை சரக்காக மாறிவிட்டது. கார்ப்பரேட்டுகளின் எண்ணங்களுக்கு களமாக மாறியுள்ளது இந்திய அரசியல். தேர்தலில் வேட்பாளர்களை நிர்ணயிப்பதிலும், சட்டமியற்றும் சபைகளில் கேள்வி கேட்பதற்கும் அடிப்படை காரணியாக பணம் மாறிவிட்டது. இச்சூழல் மாறவேண்டும்.
ஜனநாயகம் மற்றும் மதசார்ப்பற்ற கொள்கையின் உண்மையான தன்மை மக்களிடம் சென்றடைய வேண்டும். சிலரை சுரண்டவும், பலருக்கு துரோகம் செய்வதற்கும் உதவுவது அல்ல ஜனநாயகம். மக்கள் நலத்திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் அனைத்து பிரிவு மக்களுக்கும் நல்லவிதமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் SDPI லட்சியமாக கொண்டுள்ளது." இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ்