10 தொகுதிகளில் SDPI தனித்துப் போட்டி

சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.



இதுக்குறித்து அக்கட்சின் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; "முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.

மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி." என்றார்.

இவ்வறிக்கையின் போது எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் 1௦ தொகுதிகளில் முதல்கட்டமாக 6 தொகுதிகளின் பட்டியலை அவர் வெளியிட்டார்.

முதல் கட்ட தொகுதி பட்டியல்
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்

6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

SDPI - MEDIA

Related

SDPI 3401472803428576006

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item