IFF உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழக பெண்

சல்மா அப்துல் அஸீஸ், இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விடுகிறார். சவூதியில் கடந்த ஒன்றை வருடங்களாக கடுமையான உடல் மற்றும் மனரீதியிலான கொடுமைக்கு ஆளான சல்மா இந்திய ஃபெடர்னிடி உதவியுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு திரும்பியுள்ளார்.

இந்தியாவைச் சார்ந்த பெண்கள் பல்வேறு அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக வீட்டுவேலைக்காக செல்கின்றனர். இவர்களில் சிலர் பல துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தங்களின் வீட்டு நிலைமையை கருத்தில்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் காசை சம்பாத்தித்து சொந்த ஊருக்கு அனுப்பும் இப்பெண்களில் பலருக்கு ஏற்படும் மனரீதியான, உடல்ரீதியான உளைச்சல்கள் ஏராளம். அதில் ஒருவர்தாம் சல்மா.

கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக சவூதிஅரேபியாவின் மதீனா நகருக்கு ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார் அவர். அவ்வீட்டினரின் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளான சல்மா, கொடுமைகளை பொறுக்கமுடியாமல் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வேறொருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவர் நல்ல மனிதர். ஒரு முறை சல்மா மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவிக்கு செல்லும்பொழுது போலீசாரால் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். அப்பொழுது அவரிடமிருந்த ஆவணங்களை பரிசோதித்த பொழுது அவை காலவதியாகிவிட்டன. தொடர்ந்து இவர் மதீனா சிறையில் 6 மாதகாலமாக அடைக்கப்பட்டார். பின்னர் ஜித்தா நகரில் தர்ஹீலுக்கு மாற்றப்பட்டார்.

அப்பாவியான சல்மாவின் பரிதாபமான நிலையை அறிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று சல்மாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவருக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். சல்மாவை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தடையாக இருந்த அனைத்து சட்டரீதியான பிரச்சனைகளையும் வேகமாக முடித்துக் கொடுத்தது இந்திய தூதரகம்.

இதனைத் தொடர்ந்து நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் தனது சொந்த ஊருக்கு வந்திறங்கினார் சல்மா. தனது நிற்கதியான சூழலை அறிந்து சிறையிலிருந்து விடுவித்து நாடு திரும்ப உதவிய இந்தியா ஃபெடர்னி ஃபாரத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் சல்மா.



வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினரால் உருவாக்கப்பட்டது தான் இந்தியா ஃபெடர்னி ஃபாரம்.


Twocircles.net

Related

SDPI 6627346556935850095

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item