பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர்கள் கைதாகி விடுதலை

ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தனது சிறுபான்மை வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளது.

கடந்த 2010 டிசம்பர் 6 முதல் 2011 ஜனவரி 30-ஆம் தேதி வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பாப்ரி மஸ்ஜித் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தியது. தமிழகத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள், ஒன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவது மாபெரும் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பட்ட நிகழ்வுமாகும். இந்த இருபெரும் பயங்கரவாதச் செயல்களைக் குறித்த தகவல்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிறைவுதினமான ஜனவரி-30-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், இந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததோடு மீறி பேரணி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மது பஹ்ருத்தீன் உட்பட பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோரை கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும், திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான எதிர்ப்பை பதிவுச் செய்யும் விதமாகவும் இன்று(20.03.2011) திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுச் செய்திருந்தது.

ஆனால், பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடைச் செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஏ.முஹம்மது யூசுஃப், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கைஸர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கானோரை கைதுச் செய்துள்ளது.

காவல்துறையின் இச்செயலை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

நீதிக்கான போராட்டத்திலும், காவி பயங்கரவாதத்தை மக்களிடையே தோலுரித்து காட்டும் முயற்சியிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இக்கைது  நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்ததையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

POPULAR FRONT OF INDIA

Related

tamil nadu 5053571022952784069

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item