குடியுரிமை மீறல்களுக்கெதிராக CFI பேரணி
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/cfi.html
குடியுரிமைகளை பாதுகாப்பதற்கான டெல்லியில் நடந்துவரும் ஒருவார கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர்மந்தரில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பேரணி நடைபெற்றது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்தல், டாக்டர் பினாயக் சென்னை விடுவித்தல், கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறுதல், பாட்லா ஹவுஸ் போலி மோதல் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி, அலிகர், ஜாமிஆ மில்லியா ஆகிய பல்கலைக்கழகங்களில் கருத்தரங்கங்களும், இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்தியாவில் மக்களின் குடியுரிமைகளை பாதுகாப்பதற்காக மாணவர் சமூகம் களமிறங்க வேண்டுமென ஜந்தர்மந்தரில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்ட கேம்பஸ் ஃப்ரண்டின் டெல்லி மாநிலத் தலைவர் ஆலம் அஃப்தாப் உரைநிகழ்த்தினார்.
தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது அனீசுர் ரஹ்மான் இப்பேரணியில் பங்கேற்றார்.
செய்தி:தேஜஸ்