ஒரே தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள்


மனிதநேய மக்கள் கட்சி: அதிமுக கூட்டணி

1) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
2) ஆம்பூர்
3) இராமநாதபுரம்

இ.யூ.முஸ்லிம் லீக்: திமுக கூட்டணி


1) வாணியம்பாடி
2) நாகப்பட்டினம்
3) துறைமுகம்

SDPI : கூட்டணியின்றி...

(எஸ்.டி.பி.ஐ.1௦ தொகுதிகளில் போட்டியிடுகிறது முதல்கட்டமாக 6 தொகுதிகளை அறிவித்துள்ளனர்.)

1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2.இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்

6.நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்)

நேருக்கு நேர்...

மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் நின்று முஸ்லிம்களின் வாக்கை சிதறடித்து மூன்றாம் நபரை தேர்வு செய்ய வழி அமைத்திருக்கின்றன.

இதில், மனிதநேய மக்கள் கட்சியும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் முறையே எதிர் கட்சி ஆளுங்கட்சியில் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இந்த தொகுதிகளை பெற்றுள்ளார்கள்.

ஆனால், எஸ்.டி.பி.ஐக்கு அப்படியோரு நிர்பந்தம் இல்லை. சுயமாகவே அறிவித்தது. எனவே முஸ்லிம்களின் ஒற்றுமை,பிரதிநித்துவம் கருதி முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடாத வேறு தொகுதியை தேர்வு செய்து களம் காணவேண்டும்.

தமிழகத்தில் 60 தொகுதிகள் முஸ்லிம்களுக்கு சாதகமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அந்த 60 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐயும் அதன் சார்ப்பு அமைப்புகளும் பலமாகவே இருக்கிறது என்பது நாடறிந்த உண்மைதான்.

எஸ்.டி.பி.ஐ சமுதாய ஒற்றுமை, பிரதிநித்துவம் கருதி வேறு தொகுதியை தேர்வு செய்யுமானால், அந்த தொகுதியில் இருக்கும் மமகவினரும் லீக்கர்களும் கூட எஸ்.டி.பி.ஐக்கு வாக்களிப்பார்கள் சமுதாயமும் முழு ஆதரவை தந்து சட்டமன்றத்திற்கு வாழ்த்தி அனுப்பும். இன்னும் சொன்னால், இதுவே சமுதாய அரசியல் கட்சிகளின் ஒற்றிமைக்கும் அடித்தளமாகவும் முன்மாதிரியாகவும் அமையும். இன்ஷாஅல்லாஹ்!

ஆக்கம் :ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் - Adirai Post

Related

SDPI 7083819005281759136

Post a Comment

  1. அல்ஹம்துலில்லஹ்....
    அருமையான யோசனை என்று இதனை கருதுபவர்கள் அரசியல் மற்றும் பழையகால நிகழ்வுகள் தெரியாதவர்களாக இருக்குமோ என்று கருத வேண்டியிருக்கிறது.இதில் எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பது போல முஸ்லீம் லீக்கிற்கும், மமக விற்கும் விட்டு கொடுத்துவிட்டு SDPI தமிழகத்தில் 60 தொகுதிகளில் ஏதேனும் தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடலாமே என்கிறார். அவ்வாறு செயல்படுவதற்கு SDPI சிந்த்திக்காமல் செயல்படும் கட்சி அல்ல என்பது என்னுடைய கருத்து. அது மட்டும் அல்ல இக்கட்சியை பற்றி நான் கேள்விபட்டவகையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுக்க 18 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பலமான கட்டமைப்புடன் பல்லாயிரக்கனக்கான செயல்வீரர்களைக் கொண்ட தேசிய அரசியல் கட்சி என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது மறக்கவும் கூடாது. இதற்கு சான்றாக ராஜஸ்தான், கர்நாடகா(64 சீட்), கேரளா (13 சீட்) வெற்றி பெற்றதை நினைவு கூற வேண்டும். இவ்வாறு தேசிய அரசியலில் கால் பதித்த கட்சியாக இருந்த போதிலும் தனது நிலமையை தனது அறிவிப்பை வெளியிடும் முன்பு அனைத்து தரப்பு தலைவர்களுடனும், ஜமாத்துகளுடனும், சமூக அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடி தமிழக அரசியலை கையில் எடுக்க வேண்டுமா எடுத்தால் நம்மால் சமூகத்தின் உரிமைகளை பெற பின்வாங்காமல், யாருக்கும் அடிபணியாமல் (படைத்தவனை தவிர) முன்னேர முடியுமா என்பன போன்று பல கேள்விகளை தங்களுக்குள் வைத்து அலசி ஆராய்ந்து தீர்க்கமாக எடுத்த முடிவு தான் இந்த முடிவு. தனித்து போட்டியிடும் நிலைபாட்டிற்கு முன்னால் SDPI தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு அறிவிப்பை முன்வைத்தது. இது தான் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வித்திட்டிருக்க வேண்டும் அந்த அறிவிப்பு இந்த தேர்தலில் முஸ்லிம்களின் சதவிகித அடிப்படையில் 10% இட ஒதுக்கிடு தரும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்பது அதாவது 234 தொகுதிகளில் 23 - 24 தொகுதிகளை முஸ்லிகளுக்கு ஒதுக்கும் கட்சிக்கு நம் ஆதரவு என்று அறிவித்தார்கள். இது SDPI க்கு மட்டும் தொகுதி உதாரணமாக 6 தொகுதி மமகா விற்கு, 12 தொகுதி முஸ்லீம் லீக்கிற்கு , 4 தொகுதி தேசிய லீக்கிற்கு, என்று சமூக நலனில் அதீத அக்கறை கொண்டதால் இவ்வாறு அறிவித்தார்கள். உண்மை முஸ்லீமாக அல்லது சமூக அக்கறை கொண்ட கட்சியாக இருப்பின் இந்த அறிவிப்பின் பின்னால் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்திருக்க வெண்டும் அதற்கு யாரும் தயாராகவில்லை SDPI யை தவிர. இதனால் SDPI தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நீருபிக்க களம் காண விரும்பியிருக்கிறது.இதிலும் கூட முதலில் தொகுதி அறிவிப்பு செய்தது SDPI, வேட்பாளர்களை அறிவித்தது SDPI , வேட்பு மனு தாக்கள் செய்தது SDPI இந்த நிலைமையில் முஸ்லீம் லீக் ஒரு பக்கமும், மமக ஒரு பக்கமும் சீட்டுக்காக தொங்கிகொண்டிருந்தது. இவை அனைத்தையும் SDPI சமூகத்துடன் கலந்து கொண்டு தீர்மானித்து அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் இதர கட்சிகளோ எந்த ஒரு கலந்துரையாடலோ, கருத்தோ கேட்டிருக்கிரார்களா என்றால் அதில் மிகப்பெரிய கேள்விக்குறியே பதிலாகும். ஆனால் SDPI விட்டு கொடுக்க சொல்வதை நினைக்கும் போது இது போன்ற மக்கள் நம் சமூகத்தில் இருந்தால் நம் சமூகம் அடிமை சமுகமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தான் ஏற்படுகின்றது என்னை போன்றவர்களுக்கு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்... அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு கேட்டு வாழவதை விட்டு சற்று சிந்திந்து பாருங்களேன்.....

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லஹ்....
    அருமையான யோசனை என்று இதனை கருதுபவர்கள் அரசியல் மற்றும் பழையகால நிகழ்வுகள் தெரியாதவர்களாக இருக்குமோ என்று கருத வேண்டியிருக்கிறது.இதில் எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பது போல முஸ்லீம் லீக்கிற்கும், மமக விற்கும் விட்டு கொடுத்துவிட்டு SDPI தமிழகத்தில் 60 தொகுதிகளில் ஏதேனும் தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடலாமே என்கிறார். அவ்வாறு செயல்படுவதற்கு SDPI சிந்த்திக்காமல் செயல்படும் கட்சி அல்ல என்பது என்னுடைய கருத்து. அது மட்டும் அல்ல இக்கட்சியை பற்றி நான் கேள்விபட்டவகையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுக்க 18 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பலமான கட்டமைப்புடன் பல்லாயிரக்கனக்கான செயல்வீரர்களைக் கொண்ட தேசிய அரசியல் கட்சி என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது மறக்கவும் கூடாது. இதற்கு சான்றாக ராஜஸ்தான், கர்நாடகா(64 சீட்), கேரளா (13 சீட்) வெற்றி பெற்றதை நினைவு கூற வேண்டும். இவ்வாறு தேசிய அரசியலில் கால் பதித்த கட்சியாக இருந்த போதிலும் தனது நிலமையை தனது அறிவிப்பை வெளியிடும் முன்பு அனைத்து தரப்பு தலைவர்களுடனும், ஜமாத்துகளுடனும், சமூக அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடி தமிழக அரசியலை கையில் எடுக்க வேண்டுமா எடுத்தால் நம்மால் சமூகத்தின் உரிமைகளை பெற பின்வாங்காமல், யாருக்கும் அடிபணியாமல் (படைத்தவனை தவிர) முன்னேர முடியுமா என்பன போன்று பல கேள்விகளை தங்களுக்குள் வைத்து அலசி ஆராய்ந்து தீர்க்கமாக எடுத்த முடிவு தான் இந்த முடிவு. தனித்து போட்டியிடும் நிலைபாட்டிற்கு முன்னால் SDPI தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு அறிவிப்பை முன்வைத்தது. இது தான் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வித்திட்டிருக்க வேண்டும். அந்த அறிவிப்பு இந்த தேர்தலில் முஸ்லிம்களின் சதவிகித அடிப்படையில் 10% இட ஒதுக்கிடு தரும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்பதாகும் அதாவது 234 தொகுதிகளில் 23 - 24 தொகுதிகளை முஸ்லிகளுக்கு ஒதுக்கும் கட்சிக்கு நம் ஆதரவு என்று அறிவித்தார்கள். இது SDPI க்கு மட்டும் அறிவித்தது அல்ல அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்கும் பொதுவாக கேட்கப்பட்டது. உதாரணமாக 6 தொகுதி மமகா விற்கு, 12 தொகுதி முஸ்லீம் லீக்கிற்கு , 4 தொகுதி தேசிய லீக்கிற்கு, யாரேனும் ஒதுக்குவார்களானால் நம் முழு ஆதரவும் அவர்களுக்கே என்று சமூக நலனில் அதீத அக்கறை கொண்டதால் இவ்வாறு அறிவித்தார்கள். உண்மை முஸ்லீமாக அல்லது சமூக அக்கறை கொண்ட கட்சியாக இருப்பின் இந்த அறிவிப்பின் பின்னால் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்திருக்க வெண்டும் அதற்கு யாரும் தயாராகவில்லை SDPI யை தவிர. இதனால் SDPI தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நீருபிக்க களம் காண விரும்பியிருக்கிறது.இதிலும் கூட முதலில் தொகுதியை அறிவிப்பு செய்தது SDPI, வேட்பாளர்களை அறிவித்தது SDPI , வேட்பு மனு தாக்கள் செய்தது SDPI இந்த நிலைமையில் முஸ்லீம் லீக் ஒரு பக்கமும், மமக ஒரு பக்கமும் சீட்டுக்காக தொங்கிகொண்டிருந்தது. இவை அனைத்தையும் SDPI சமூகத்துடன் கலந்து கொண்டு தீர்மானித்து அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் இதர கட்சிகளோ எந்த ஒரு கலந்துரையாடலோ, கருத்தோ கேட்டிருக்கிரார்களா என்றால் அதில் மிகப்பெரிய கேள்விக்குறியே பதிலாகும். ஆனால் SDPI விட்டு கொடுக்க சொல்வதை நினைக்கும் போது இது போன்ற மக்கள் நம் சமூகத்தில் இருந்தால் நம் சமூகம் அடிமை சமுகமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தான் ஏற்படுகின்றது என்னை போன்றவர்களுக்கு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்... அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு கேட்டு வாழவதை விட்டு சற்று சிந்திந்து பாருங்களேன்.....

    ReplyDelete
  3. Very few of the people have opinion like Brother ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் - Adirai Post. But majority of the muslims community and dalit communities are supporting the view taken by SDPI. Why not concern MMK cadres and Leagures (மமகவினரும் லீக்கர்களும்) raise this issue to their leaders since they did not even file the application!

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item