'ஹிந்துத்துவம் என்பதே எங்கள் அடிப்படை கொள்கை’: RSS சூளுரை
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/rss_29.html
ஹிந்துத்வா கொள்கை சந்தர்பவாதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பிஜேபி தலைவர் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து,ஹிந்துத்துவம் என்பது எங்கள் அமைப்பின் அடிப்படைவாதம் என்றும்,அதில் எந்த மாற்றுக் கருத்தும் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;”ஹிந்துத்துவா கொள்கை விவகாரத்தில் பிஜேபி-யும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. எங்களை பொறுத்தமட்டில், எங்கள் நோக்கம் ‘ஹிந்துத்துவமே’ ஆகும்.
‘சந்தர்பவாதம்’ என்ற கருத்தை தான் சொல்லவில்லை, அமெரிக்க தூதர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்று ஜெட்லி ஏற்கனவே விளக்கிவிட்டார், அத்துடன் இந்த விசயம் முடிந்துவிட்டது.இதில் எந்த சர்ச்சையும் தேவையில்லை.” என்பதாக மாதவ் தெரிவித்தார்.
“ஒவ்வொரு சேவக்கிற்கும், ஹிந்துத்துவம் என்பது உயிர்மூச்சு, இது அவர்கள் மத நம்பிக்கையிலே கலந்த ஒன்று” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்ணாடி மாளிகையில் வாழும் ஒருவர் மற்றவர்களை தாக்க நினைப்பது முட்டாள்தனம் என்று காங்கிரஸ் இது தொடர்பாக முன்பே கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஹிந்துத்துவா கொள்கை என்பது ஹிந்து மக்களுக்காக ஒரு தனி நாடு உருவாக்குவது என்று பொருள்.