தேஜஸ் வளைகுடா பதிப்பிற்கான செய்தி அலுவலகம் திறப்பு

தம்மாம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மன்னர் ஃபஹத் மஸ்ஜிதுக்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. வளைகுடா தேஜஸ் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் விருப்பத்திற்கும், எதிர்ப்பார்ப்பிற்கும் மகுடம் சூட்டும் என செய்தி அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நாஸருத்தீன் சுட்டிக்காட்டினார்.
ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை அளிக்க தேஜஸினால் இயலும் என அவர் தெரிவித்தார். சவூதியைத் தொடர்ந்து கத்தர், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலும் தேஜஸ் உடனடியாக பிரசுரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ்