கைது செய்யப்பட்ட நிரபராதிகளை விடுவிக்க தேசிய சிறுபான்மை கமிஷன் கோரிக்கை

2006-ஆம் ஆண்டில் மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸார் கைது செய்துள்ள நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம்களையும் விடுவிக்கவேண்டுமென தேசிய சிறுபான்மை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

இதுக்குறித்து தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

'மலேகான் குண்டுவெடிப்பில் தனக்கு பங்கிருப்பதாக அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சூழலில் ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், மாநில உள்துறை அமைச்சர், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர், அரசு சாரா நிறுவனங்கள், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் விவாதித்துள்ளோம்.

ஆர்தர் ரோடு சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் கமிஷன் சந்தித்துள்ளது. மேலும் இதுத்தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், ப.சிதம்பரம், சி.பி.ஐ இயக்குநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். இளைஞர்களுக்கு நீதிக்கிடைக்க கமிஷன் முயலும்.

மஹராஷ்ட்ரா மாநிலத்தில் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார நிலைமைகள் குறித்து கமிஷன் விவாதித்துள்ளது.' இவ்வாறு வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ்

Related

RSS 3809237910962867812

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item