போருக்கு தயார் – கத்தாஃபி
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/blog-post_6599.html
திரிபோலி:லிபியா அரசுக்கெதிராக தாக்குதலை நடத்தும் வெளிநாட்டு படையினருடன் போருக்கு தயார் என அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார்.
“நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு நான் அடிபணிய மாட்டேன்” என அவர் அரசு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.
“லிபியாவில் ஆயுத கிடங்குகள் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இனி நாட்டின் ஒவ்வொரு நபர்களின் கையிலும் தானியங்கி ஆயுதங்களும், மோர்ட்டார்களும், வெடிக்குண்டுகளும் இருக்கும். ஒரு ‘நீண்ட போருக்கு’ நாங்கள் தயாராகிவிட்டோம்.” இவ்வாறு கத்தாஃபி கூறியுள்ளார்.
பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க அந்நிய நாட்டு படைகள் லிபியாவில் வான்வழித் தாக்குதலை துவக்கியுள்ளன.
THOOTHU ONLINE